வழிப்பறி வழக்கில் சிறுவன் கைது

83பார்த்தது
வழிப்பறி வழக்கில் சிறுவன் கைது
விழுப்புரம் வெளிமாநில தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் கேசாராம் மகன் தீபாராம், 26; விழுப்புரம் வள்ளலார் நகரில் தங்கி, ஜவுளிக் கடையில் பணிபுரிகிறார். இவர், கடந்த 14ம் தேதி காலை திருச்சி சாலையில் இருந்து வீட்டிற்குச் சென்றார்.

அப்போது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் தீபாராமிடமிருந்து 15 ஆயிரம் ரூபாய் இருந்த பையை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து அப்பகுதி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, விழுப்புரம் பெரியகாலனியை சேர்ந்த 17 வயது சிறுவன் மீது நேற்று முன்தினம் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி