2023-24ஆம் நிதியாண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை சேர்த்து போக்குவரத்துக் கழகங்களில் உள்ள சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் கணக்கிட்டு, அதன்படி 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், ஒப்பந்த முறையில் பணிபுரிந்து வருபவர்களுக்கும், 2023-24 நிதியாண்டில் 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைவருக்கும் சட்டப்படி போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.