
முகையூர்: பள்ளி நூற்றாண்டு விழா
முகையூர் ஒன்றியம், மணம்பூண்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியின் நூற்றாண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமை ஆசிரியர் செந்தாமரை வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் அஞ்சலா தேவி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் தமிழரசு முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பாராட்டி சால்வை அணிவித்து, நினைவு பரிசுகளை வழங்கினர். தொடர்ந்து பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டன.மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் ஷீலா நன்றி கூறினார்.