உலகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்களின் முக்கிய நிகழ்வான ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சந்தேப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஈக்தா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதில் திருக்கோவிலூர் சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் தொகுதியில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் அனைவரும் அருகாமையில் இருந்தவர்களிடம் தங்களது ரம்ஜான் வாழ்த்துக்களை கட்டித் தழுவி தெரிவித்தனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வண்ணம் சிறப்பு தொழுகை நடைபெறும் இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.