அணைக்கட்டு சீரமைக்க நீதி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

63பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அத்தண்டமருதூர் பகுதியில் அமைந்துள்ளது அணைக்கட்டு. இந்த அணைக்கட்டு கட்டி முடிக்கப்பட்டு நூறு ஆண்டுகளை கடந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்னர் அணைக்கட்டு சீரமைப்பு பணி நடைபெற்றது. அதன் பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த தொடர் மழையின் காரணமாகவும், ஃபெஞ்சல் புயல் காரணமாகவும் அதிகப்படியான நீர் தென்பெண்ணை ஆற்றில் வந்தது, இதன் காரணமாக அத்தண்டமருதூர் பகுதியில் அமைந்துள்ள திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்று அணைக்கட்டு முற்றிலுமாக சேதம் அடைந்தது. இந்த நிலையில் இது குறித்து இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் வனத்துறை அமைச்சருமான பொன்முடி இடம் அணைக்கட்டு புனரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பழுதடைந்த தென்பெண்ணை ஆற்று அணைக்கட்டை புதுப்பிப்பதற்கு புனரமைப்பதற்கு 130 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திமுகவினர் மற்றும் விவசாய சங்கத்தினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி