உடலில் சிவந்த நிறத்தில் கொப்புளங்கள் தோன்றி 12 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளை குறிவைத்து தாக்கும் 'தக்காளி காய்ச்சல்' கோடைகாலத்தில் அதிகம் ஏற்படும் தன்மை கொண்டதாகும். சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் ஏற்படும் இக்காய்ச்சல் ஏற்பட்டால் தோல் வெடிப்பு, எரிச்சல், மூட்டு வலி, உடல் வலி, நீரிழிவு, உடல் சோர்வு, வாந்தி பாதிப்புகளும் ஏற்படும். குழந்தைகள் விளையாடச் சென்றுவரும்போது கை-கால்களை சுத்தம் செய்வது இக்காய்ச்சலை தவிர்க்க உதவும்.