திருக்கோவிலூரில் உலகளந்த பெருமாள் அம்சா வாகனத்தில் வீதிஉலா

82பார்த்தது
கள்ளகுறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகர் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற வைணவ தலமான நடு நாட்டு திருப்பதி என அழைக்கப்படும் திருவிக்ரசாமி கோவில் அமைந்துள்ளது.

கடந்த 3ம்தேதி பங்குனி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று முதல் நாள் உற்சவத்தில் உலகளந்த பெருமாள் ஹம்ஸ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வேத மந்திரங்கள் முழங்க பெருமாள் எழுந்தருளி நகர் பகுதியில் உள்ள முக்கிய மாடவீதிகளில் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவிலின் ராஜ கோபுரத்தின் வழியாக உலகளந்த பெருமாள் வரும் போது பக்கதர்கள் அனைவரும் கோவிந்தா கோவிந்தா என வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி