அரகண்டநல்லூர் அருகே அதிமுக சார்பில் ஆலோசனைகூட்டம் நடைபெற்றது

75பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், அரகணடநல்லூர் பகுதியில், முகையூர் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பிலும், கண்டாச்சிபுரம் பகுதியில் முகையூர் கிழக்கு ஒன்றியம் சார்பிலும் பூத் கிளை நிர்வாகிகள் தேர்வு செய்து, பொறுப்பாளர் நியமனம் மற்றும் ஆலோசனை கூட்டம், கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளர், கழக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சங்கரதாஸ் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, தனபால்ராஜ், கழக எம்ஜியார் இளைஞரணி துணை செயலாளர் விநாயகமூர்த்தி, மாவட்ட மாணவரணி தலைவர் பார்த்திபன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சீனுவாசன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி