போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்தவர் கைது

71பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் ரிஷிவந்தியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலியாக ஆவணங்கள் தயார் செய்து பத்திரப்பதிவு நடைபெற்றதாக திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புகார் வந்தது. இந்த புகாரை தொடர்ந்து ரிஷிவந்தியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு பெண் உட்பட இருவரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அந்த வழக்கில் தொடர்புடைய அருணாபுரம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருக்கோவிலூர் போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த பத்திரப்பதிவிற்கு போலியாக வாரிசு, இறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதார் உள்ளிட்டவைகளை போலியாக தயார் செய்து கொடுத்த சக்தி என்கிற சக்திவேல் என்பவனை திருக்கோவிலூர் போலீசார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி