சாலையில் அமைதியாக நடந்து சென்ற முதியவரை மாடு ஒன்று முட்டிதூக்கிய பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னை அம்பத்தூரில் முன்னாள் இராணுவ வீரரான முதியவர் ஒருவரை மாடு முட்டிதூக்கியது. சாலையோரம் பிளாஸ்டிக் கவரை சாப்பிட்டுக்கொண்டு இருந்த மாடு திடீரென மூர்க்கமாகி தாக்கியது. இதனால் படுகாயமடைந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.