மிக பெரிய கட்டிடமாக கருதப்படும் போயிங் ஆலையை விட 5 மடங்கு பெரியதாகவும், 20 எம்பையர் ஸ்டேட் கட்டடத்தை விழுங்கும் அளவுக்கு உலகின் மிகப் பெரிய கட்டடத்தை சவுதி அரசு கட்டி வருகிறது. சுற்றுலாவை ஈர்க்க ரியாத்தில் சுமார் ரூ.43 லட்சம் கோடி செலவில் 400 மீட்டர் உயரத்திற்கு எழுப்பப்பட்டு வருகிறது. ஆடம்பர ஓட்டல்கள், தியேட்டர்கள், ரூப் டாப் கார்டன்கள் என அத்தனையும் இதற்குள் இருக்குமாம். 2030க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.