விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பேருராட்சிக்கு உட்பட்ட பகுதியில், புரட்சிதலைவி அம்மா பேரவை சார்பில் கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு செய்த நலத்திட்ட பணிகள் குறித்தும் வளர்ச்சிப் பணிகள் குறித்த சாதனைகள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், இரா. குமரகுரு ஆலோசனையின் படி, கள்ளகுறிச்சி மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் ஞானவேல், ஏற்பாட்டில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கழக அம்மா பேரவை இணை செயலாளர் பிரபு அரகண்டநல்லூர் பேரூர் கழக செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய கழகச் செயலாளர்கள் பழனி, சேகர், சந்தோஷ், இளங்கோவன், தனபால்ராஜ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் அரகண்டநல்லூர் பஸ் நிறுத்தம், கடைவீதி உட்பட நகரின் பல்வேறு பகுதிகளுக்கு ஊர்வலமாகச் சென்று கடந்த கால அதிமுக அரசின் சாதனைகள் விளக்க துண்டு பிரசுரங்களை பொதுமக்கள், வியாபாரிகள், மாணவர்கள், பயணிகள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர்.