மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் & நிறுவனங்களின் பெயர்பலகையில் தமிழ் மொழி கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார். மே 15, 2025 க்குள் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ் மொழியில் பெயர்பலகைகள் இடம்பெற்றிருக்க வேண்டும். அரசின் உத்தரவை கடைபிடிக்காத பட்சத்தில் கண்காணிப்பு குழு வாயிலாக அபராத நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.