கடலூர் வீரசோழபுரம் கிராமத்தில் உள்ள மக்கள் உயிரிழந்தால், சடலத்தை வாய்க்காலில் நீந்திச்சென்று அடக்கம் செய்யும் அவலம் தற்போது வரை நீடித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். வாய்க்கால் நடுவே பாலம் கட்டித் தர பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் எந்த பயனும் இல்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சடலத்தை வாய்க்காலில் நீந்தியபடி எடுத்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.