தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் ஹிந்தியை கற்பதில், யாருக்கும் எந்த சங்கடமும் இல்லை என திருமாவளவன் கூறியுள்ளார். NEP மூலம் இந்தியை திணிக்க பாஜக உறுதியாக இருப்பதாக குற்றஞ்சாட்டிய அவர், இந்த திணிப்பையே நாங்கள் எதிர்க்கிறோம் என்றார். மேலும், அவரவர் தாய்மொழியை கற்பதில் எந்த சிக்கலும் இல்லை எனவும் இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்பதுதான் பாஜக அரசு புதிதாக கையாளும் அணுகுமுறை எனவும் அவர் விமர்சித்தார்.