டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைவதற்கு, அப்பகுதி மக்கள் மற்றும் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், சுரங்கம் அமைய உள்ள இடத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்த பரிந்துரைத்துள்ள மத்திய அரசு பல்லுயிர் பகுதிகளை தவிர்த்து விட்டு மற்ற இடங்களை ஆய்வு செய்ய பரிந்துரைத்துள்ளது.