ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று (டிச.24) மாலை 5.40 மணியளவில் பால்னோய் கோரா போஸ்ட் நோக்கிச் சென்று கொண்டிருந்த மராத்தா லைட் காலாட்படையின் ராணுவ வாகனம், கோரா போஸ்ட் அருகே உள்ள 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.