கிறிஸ்துமஸ் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஈபிள் டவர் பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்நிலையில், ஈபிள் டவரில் உள்ள லிஃப்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதல் தளத்திற்கும், இரண்டாவது தளத்திற்கும் இடையே லிஃப்டில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தி தீயை அணைத்தனர்.