150 ஆண்டு பழமையான தேவாலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிராத்தனை

84பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகர் பகுதியில், 150 ஆண்டுகள் பழமையான நால்லாயன் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தில் இன்று ஆங்கில புத்தாண்டு 2024 ஐ ஒட்டி நள்ளிரவு 11 மணி முதல் இரண்டு மணி வரை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அருட்தந்தை அலெக்ஸ், பங்குத்தந்தை கிளிட்டஸ் ரெக்ஸ் தலைமையில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலியில் திருக்கோவிலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். திருப்பலியின் நடுவே புத்தாண்டு பிறந்ததை ஒட்டி ஒருவருக்கொருவர் உடன் அனைவரும் தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி