புருவங்கள் முகத்திற்கு அழகு சேர்க்கும் ஒரு விஷயம். சிலருக்கு புருவம் அடர்த்தியாக இருக்காது. எனவே புருவங்களை அழகாக தெரிய வைக்க பல வழிமுறைகளை கையாள்கின்றனர். ஆனால் இதற்கு எளிய தீர்வு ஒன்று உள்ளது. தூங்கச் செல்வதற்கு முன்னர் பருத்தி துணி அல்லது காட்டனை பயன்படுத்தி புருவங்களை நன்றாக துடைத்து விட்டு, விளக்கெண்ணைய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். அதிலுள்ள ரிசினோலிக் அமிலம் புருவத்தை அடர்த்தியாக வளரச் செய்யும். முயற்சி செய்து பாருங்கள்.