வீட்டிலேயே பீட்சா சாஸ் செய்யலாம் (செய்முறை)

78பார்த்தது
வீட்டிலேயே பீட்சா சாஸ் செய்யலாம் (செய்முறை)
எந்த ஒரு பிரசர்வேட்டிவும் இல்லாமல் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் பீட்சா சாஸ் தயாரிக்க முடியும். அதற்கு முதலில் 4 தக்காளிகளை வேகவைத்து, தோலை உரித்து பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் ஆலிவ் எண்ணெயை சூடாக்கி, நசுக்கிய பூண்டு, அரைத்து வைத்த தக்காளி பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கிளறவும். பின்னர் மிளகுத் தூள், ஆரிகேனோ சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விட்டு சாஸ் பதத்திற்கு வந்த பின் இறங்கினால் சுவையான பீட்சா சாஸ் ரெடி.

தொடர்புடைய செய்தி