திண்டிவனம் நாடாளுமன்ற தேர்தல் ஆய்வு கூட்டம்

575பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும். நிலையான கண்காணிப்பு குழுவினர் வெவ்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அதேபோல் வாக்குப்பதிவு மைய கட்டிடங்கள் பாதுகாப்பாகவும் சேதம் அடையாமலும் இருப்பதை அந்தந்த பகுதியில் உள்ள தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு சேதம் அடைந்த கட்டிடங்களை போர்க்கால அடிப்படையில் செப்பணிடப்பட வேண்டும் கேட்டுக் கொண்டார். கொடிக்கம்பங்கள், கட்சி பேனர்கள் உள்ளிட்டவை அந்தந்த தேர்தலில் அலுவலர்கள் ஆய்வு செய்து அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டார். பிரச்சனைக்குரிய வாக்குப்பதிவு மையங்கள் கண்காணிக்கப்பட்டு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதன் ஜெய் நாராயணன், துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் முகுந்தன், திண்டிவனம் சார் ஆட்சியார் திவ்யான் ஷூ நிகம், வட்டாட்சியர்கள் மரக்காணம் பாலமுருகன், திண்டிவனம் சிவா, கோட்டகுப்பம் டி. எஸ். பி சுனில் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி