மக்களவைத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள், ரூ.500 கட்டணமாக செலுத்தி விருப்ப மனுப் படிவத்தை இன்று முதல் சென்னை சத்தியமூர்த்தி பவனில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுப் படிவங்களை மார்ச் 20-ம் தேதி மதியம் 1 மணிக்குள் கொடுக்க வேண்டும். பொது தொகுதிகளுக்கு 30,000 ரூபாயும், தனித் தொகுதிகளுக்கு 15,000 ரூபாயும், சட்டமன்ற தொகுதிக்கு 5,000 ரூபாயும் கட்சி நன்கொடையாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.