திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டி

145248பார்த்தது
திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டி
திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் மதிமுக வேட்பாளராக வைகோவின் மகனும், மதிமுகவின் முதன்மை அணிச் செயலாளருமான துரை வைகோ போட்டியிட உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மதிமுக ஆட்சி மன்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். பம்பரம் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளோம். பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம் என வைகோ தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி