சென்னையில் திமுகவின் 148 வது வார்டு வட்டச் செயலாளராக பதவி வகித்து கமலக்கண்ணன் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதனை கொண்டாட, தனது அலுவலகம் வாயிலில் கட்சி கொடி ஏற்றுவதற்காக16-ம் தேதி கோயம்பேடு காவல் நிலையத்தில் அனுமதி கேட்டுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனாலும் முன்னாள் அதிமுக அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் கொடியேற்றி பிரியாணி வழங்கி கொண்டாடினர். இதனையடுத்து தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மற்றும் அதிமுகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.