ஈரான் அதிபர் மறைவு : இந்தியாவில் துக்கம் அனுசரிப்பு!

70பார்த்தது
ஈரான் அதிபர் மறைவு : இந்தியாவில் துக்கம் அனுசரிப்பு!
ஹெலிகாப்டர் விபத்தில் உயரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில், நாளை (மே 21) நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி நாளை ஒருநாள் மட்டும் அரசு அலுவலகங்களில் இருக்கும் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்ராஹிமின் இறுதி சடங்கு நாளை நடைபெறும் எனவும் ஈரானில் 5 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி