சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியாளர்களுக்கு புதிய விசா

76பார்த்தது
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியாளர்களுக்கு புதிய விசா
ஐக்கிய அரபு எமிரேட்ஸில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பணியாற்றும் நபர்களுக்கு 'ப்ளூ ரெசிடென்சி' என்ற பெயரில் விசா வழங்க ஐக்கிய அரபு அமீரக அரசு முடிவு செய்துள்ளது. பத்து வருடங்கள் அவர்கள் தங்கள் நாட்டில் தங்குவதற்கு ஏதுவாக இவை வழங்கப்படுகிறது. கடல்வாழ் உயிரினங்கள், சுற்றுச்சூழல் அமைப்பு, காற்றின் தரம் போன்ற துறைகளில் பணிபுரிபவர்கள் இதற்குத் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஃபெடரல் அத்தாரிட்டி இணையதளத்தில் இந்த விசாக்களுக்கு விண்ணப்பிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி