அனைத்து மின் சேவைகளை ஒரே தளத்தில் பெறலாம்

68பார்த்தது
அனைத்து மின் சேவைகளை ஒரே தளத்தில் பெறலாம்
மின்சார வாரியத்தின் அனைத்து சேவைகளும் ஒரே இணையதளத்தில் பெறும் வகையில் புதிய இணையதள முகவரியை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய http://app1.tangedco.org/nsconline/ என்ற இணைதளத்தில் பொது தகவல்கள், தேவைப்படும் ஆவணங்கள், விநியோக பிரிவுகள், செலுத்த வேண்டிய கட்டணங்கள், கால அவகாசங்கள் என பல தகல்வகளை பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியின் காரணமாக பல முகவரிகளை சென்று தேடாமல் ஒரே முகவரியில் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி