டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு பணிகள் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் இன்று (மே 20) முதல் நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாத எதிர்ப்பு மற்றும் நாசவேலை எதிர்ப்பு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை சிஆர்பிஎஃப் வீரர்கள் கண்காணித்து வந்த நிலையில் சிஐஎஸ்எஃப் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.