திருட்டுப்பழி.. மாணவி தூக்கிட்டு தற்கொலை

560பார்த்தது
திருட்டுப்பழி.. மாணவி தூக்கிட்டு தற்கொலை
கர்நாடகாவின் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஜெயஸ்ரீ தனது பையில் இருந்த ரூ.2000 காணவில்லை என கூறியுள்ளார். மேலும் 8ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி மீது அவருக்கு சந்தேகம் வந்துள்ளது. ஆனால் அந்த மாணவி தான் எடுக்கவில்லை என கூறியுள்ளார். ஆனாலும் ஜெயஸ்ரீ சக மாணவிகளை வைத்து அந்த மாணவியின் ஆடைகளை களைந்து சோதித்து பார்த்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு சென்ற மாணவி மன வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி