விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருமலை, 63; விவசாயி. இவர், கடந்த 23ம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் சென்னை திருவெற்றியூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றவர், நேற்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோ இருந்த ஒரு சவரன் நகை, 400 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 22 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது
புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.