ஆரணி நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த செஞ்சி சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி செஞ்சி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வளர்மதி, செஞ்சி தாசில்தார் ஏழுமலை, பொறியாளர்கள் கிர்லோஸ்கர், மஞ்சுநாத், விவேக், குல்தீப், நவநீ தம் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்ற இப்பணியினை ஆரணி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான பிரியதர்ஷினி ஆய்வு செய்தார். அப்போது உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை யினர் உடனிருந்தனர்.