தலை பிரசவம் எனப்படும் முதல் பிரசவம் பெண்களுக்கு அதீத பயத்தை ஏற்படுத்தும். பிரசவம் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்ற பயமும் கவலையும் ஏற்படும். அந்த சமயத்தில் நண்பர்கள் உற்றார் உறவினர்கள் அனைவரும் கூடி எதுவும் ஏற்படாமல் பிரசவம் நல்ல முறையில் நடக்கும் உன்னை பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கையை அளிக்கும் விதமாக இந்த வளைகாப்பு சடங்கு நடத்தப்படுகிறது. இதன் பின்னணியில் ஏகப்பட்ட நன்மைகளும் இருக்கின்றது.