தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிக்கடப்பள்ளி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நாளை (டிச.24) காலை 11 மணிக்கு விசாரணைக்கு வர வேண்டும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் 'புஷ்பா 2' படம் வெளியான நாளன்று சந்தியா திரையரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.