விடுதலை 2 படத்தை பாராட்டி நடிகர் தனுஷ் எக்ஸ் தளத்தில் பாராட்டியுள்ளார். அதில், "விடுதலை 2 படம் மிகவும் அருமையாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் உள்ளது. முதல் காட்சியில் இருந்து கடைசி வரை கவர்ந்துள்ளது. இது மாஸ்டர் மேக்கர் வெற்றிமாறனின் சிறப்பான படைப்பு. இளையராஜா சாரின் இசை மிகவும் பிடித்திருந்தது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு பிரமாதம். மேலும் படக்குழுவிற்கு அன்பான வாழ்த்துகள்" என அதில் பதிவிட்டுள்ளார்.