பழம்பெரும் திரைப்பட இயக்குநர் சியாம் பெனகல் (90) காலமானார். அங்கூர், நிஷாந்த், பூமிகா, ஜுனூன் உள்ளிட்ட புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கிய சியாம் பெனகல் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை 6.30 மணிக்கு சிறுநீரக இழப்பு காரணமாக இயற்கை எய்தினார். சியாம் பெனகல் தேசிய விருது, நந்தி விருது, தாதா சாகேப் பால்கே விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷண் உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.