தமிழ்நாட்டுப் பள்ளி தேர்ச்சி முறையில் மாற்றம் ஏதும் இல்லை. தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 5, 8ம் வகுப்பு ஆல்-பாஸ் முறையை ரத்து செய்வதாக மத்திய அரசு கூறியுள்ள நிலையில், "ஒன்றிய அரசு திருத்தம் கொண்டு வந்திருந்தாலும் தமிழ்நாட்டு பள்ளிகளில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ்" விளக்கமளித்துள்ளார்.