வேலூரில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்
வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் மொத்தம் ஆயிரத்து 700 தூய்மை பணியாளர்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது இவர்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான தினசரி 430 ரூபாய் கூலியை மட்டுமே வழங்குவதாகவும், அதிலும் பிடித்தம் செய்து 370 மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதனால் கூலி உயர்வு கேட்டு போராடிய நிலையில் 2023 ஆம் ஆண்டில் தினசரி கூலி 538 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும், 2024 ஆம் ஆண்டு தினசரி கூலி 570 தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனர்களுக்கு கடிதம் அனுப்பியும் இதுவரை நிர்ணயித்த கூலி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், முறையான PF தொகை செலுத்தக் கோரியும் பகுஜன் சமாஜ் தூய்மை தொழிலாளர்கள் மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கத்தினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று(அக்.17) முதல் பொது வேலை நிறுத்தம் என்று கூறி, வேலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.