கோவில் வளாகத்துக்குள் ரீல்ஸ் வீடியோ எடுத்தால் சாமிக்கு என்ன மரியாதை? என சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சாமி மீது பயம் வேண்டாமா? - இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனக்கூறிய உயர்நீதிமன்றம் பெண் தர்மகர்த்தா உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. சாமி படத்துக்கு கீழ் இருக்கையை போட்டு வடிவேலு காமெடியை ரீல்ஸாக எடுத்துள்ளார் என புகாரளிக்கப்பட்டிருந்தது.