ராணிப்பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம்
தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகமான ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, நர்சிங் மற்றும் பி.இ. படித்தவர்கள் கலந்துகொள்ளலாம். மேற்கண்ட கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அன்றைய தினம் காலை 10 மணி அளவில் எண். 9, ஆற்காடு சாலை, பழைய பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகை புரிந்து கலந்துகொள்ளலாம். இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.