ராணிப்பேட்டை: முன்னாள் படை வீரர்களுக்கான குறைதீர்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 21-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்களது படைவிலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் மனுக்கள் ஆகியவற்றின் இரண்டு நகல்களுடன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.