ராணிப்பேட்டையில் நாளை விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்
நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நாளை (29ம் தேதி) காலை 11 மணிக்கு ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெறுகிறது என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார். எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு பொதுப் பிரச்சினைகளைக் கோரிக்கை வழியாகவும், தனிநபர் பிரச்சினைகளை மனுக்களாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.