சர்வதேச தொழிலாளர் அமைப்பு இந்தியாவில் பணி நேரம் மற்றும் பணிச்சுமை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இளம்பெண்கள் வாரம் 55 மணி நேரம் வேலை பார்ப்பதாகவும், ஐடி, ஊடகத்துறையில் இருப்பவர்கள் ஒரு வாரத்திற்கு 56.5 மணி நேரம் வேலை பார்ப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சராசரியாக பணி நாட்கள் 5 என்று வைத்துக் கொண்டால் பெண்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது. இது ரஷ்யா, ஜெர்மனி போன்ற நாடுகளை காட்டிலும் மிக அதிகம்.