திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் என்ன பொது மேடையில் விவாதிக்க தயார், முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி சவால்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர கழகம் சார்பில் அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனை கூட்டம் நகர கழக செயலாளர் டி. டி. குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான கே. சி. வீரமணி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் திமுக, பாஜக திருட்டுத்தனமாக உறவு வைத்து உள்ளனர். தேர்தலின் போது சிறுபான்மையினரின் ஓட்டு வாங்கவே திமுக போட்ட நாடகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திமுகவும், பாஜக சேர்ந்து தேர்தலை சந்திக்கட்டும் பார்க்கலாம் என ஆவேசமாக பேசினார்.
மேலும் திமுக சுயநலம் கொண்ட கட்சி அவர்களின் உறுப்பினர்களின் எதிர்காலத்திற்காக ஆட்சி செய்து வருகின்றனர். திமுக தமிழகத்திற்கு செய்த திட்டங்கள் என்ன , அதிமுக ஆட்சியில் அம்மாவின், எடப்பாடியாரின் திட்டங்கள் என்ன என்று பொது மேடையில் விவாதிக்க நாங்கள் தயார், திமுக தயாரா என சவால் விடுத்தார்.
திமுக ஆட்சியில் நடைப்பெறும் அனைத்து அவலங்களையும் வெளியிடாமல் இருக்க ஊடகங்களை தன்பக்கம் வைத்து உள்ளனர் என முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி குற்றம் சாட்டினார்.