தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வசித்துவரும் சின்னப்பொண்ணு (55). இவருக்கு கடந்த 1996ம் ஆண்டு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. கட்டிக்கொடுத்து 10 ஆண்டுகள் மட்டுமே நல்ல நிலையில் இருந்த வீடுகள், அதன் பின்னர் உறுதித்தன்மையை இழக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில், சின்னபொண்ணு இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.