கர்நாடக மாநிலம் உடுப்பி, கரம்பள்ளி பகுதியில் வசித்து வரும் இளைஞர் முகமது அக்ரம். இவர், அப்பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து, சிறைக்கு சென்றவர் ஆவார். 5 ஆண்டுகளுக்குப் பின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், மீண்டும் கல்லூரி மாணவியை வீடு திரும்பும்போது கடத்திச் சென்றுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்களின் மகள் நலமுடன் திரும்ப வேண்டும் என பெற்றோர் கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.