கேரளா மாநிலம் மலப்புறம் மாவட்டம் திரூரங்காடி பகுதியில் நேற்று பொதுத்தேர்வு நடைபெற்றது. அப்போது சில மாணவர்கள் காப்பியடிக்க முயன்றதாக தெரிகிறது. கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர், அதனை தடுத்து நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், அந்த ஆசிரியர் சென்ற கார் மீது பட்டாசை கொளுத்தி போட்டனர். எனினும் ஆசிரியருக்கு காயம் ஏற்படவில்லை. போலீசார், மாணவர்களில் சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.