வட சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளும் கேரம் வீராங்கனையுமான தங்கை காசிமா போல இன்னும் நூற்றுக்கணக்கான காசிமாக்களை உருவாக்க தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடர்ந்து துணை நிற்கும். விளையாட்டு வீரர்கள் யாருக்காவது போட்டியில் பங்கேற்க நிதி உதவி தேவைப்பட்டால், https://tnchampions.sdat.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பியுங்கள். திறமைக்கேற்ப நிதியுதவி தரப்படும் என சட்ட பேரவையில் துணை முதல்வர் உதயநிதி அறிவித்துள்ளார்.