விஜய்யை கடுமையாக சாடிய அண்ணாமலை

58பார்த்தது
கட்சி தொடங்கி விஜய் எத்தனை முறை வெளியே வந்துள்ளார்? எத்தனை முறை மக்களை சந்தித்துள்ளார்? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "மீடியா வெளிச்சத்திற்காக பிரதமர் குறித்து விஜய் பேசுகிறார். மைக் எடுத்து கைக்காட்டி விட்டு செல்வது மட்டும் அரசியல் அல்ல. களத்தில் நின்று வேலை பார்ப்பது தான் அரசியல். வெறும் வாய் சவடாலா? சினிமா டயலாக்கா? களப்பணியா? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்" என்று கூறியுள்ளார். நன்றி: NEWSTAMIL 24X7

தொடர்புடைய செய்தி