இரவு 7 மணிக்கு முன்பு உணவை சாப்பிட்டால் அதனை ஜீரணமாக்குவதற்கு உடலுக்கு போதுமான நேரம் கிடைக்கும். இரவில் தாமதமாக சாப்பிடுவது செரிமான உறுப்புகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். தாமதமாக சாப்பிட்டால் உணவு ஜீரணமாவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதோடு தூக்கத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும். இரவு 7 மணிக்கு முன்பு சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. உடல் எடை சரியாக இருக்க உதவும்.